``திமுக கூட்டணியில் புதிய கட்சிகள்''- எம்.பி கனிமொழி

திருநெல்வேலியில் எம்.பி கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்த கருத்துக் கணிப்புகள் வந்தாலும் வராவிட்டாலும் தேர்தல் களம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியை உறுதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் எந்த மோதல் போக்கும் இல்லை. கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் கூட்டணிக்கு வரும் புதிய கட்சிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தான் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.



