GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › மாணவன் உயிரைப் பறித்த செல்போன்
உள்ளூர் செய்திகள்

மாணவன் உயிரைப் பறித்த செல்போன்

👤 Author 🕐 30 Sep 2026, 05:16 👁️ 16 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
மாணவன் உயிரைப் பறித்த செல்போன்
விளம்பரம்Advertisement
நங்கநல்லூரில் செல்போன் பள்ளிக்கு கொண்டு வந்ததற்காக ஆசிரியர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவன் வீட்டில் தற்கொலைசெய்து கொண்டான்

சென்னை நங்கநல்லூர் டெலிகிராப் காலனியைச் சேர்ந்தவர் ஆதவ் (வயது-16). நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

தேர்வு நடைபெற்று வந்த நிலையில், பள்ளிக்கு செல்போன் கொண்டு சென்று உள்ளார்.இதை கவனித்த ஆசிரியர்கள் அவரை பிடித்து விசாரித்து உள்ளனர்.பின்னர் அவரது தாய் ஸ்ரீவித்யாவுக்கு தகவல் தெரிவித்து பள்ளிக்கு வரவழைத்து,தேர்வு நேரத்தில் செல்போன் கொண்டு வரக் கூடாது என எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த ஆதவ், முதல் மாடியில் ஓய்வெடுத்துவிட்டு வந்து சாப்பிடுவதாக கூறி முதல் மாடிக்கு சென்றுள்ளார்.சிறிது நேரம் கழித்து தம்பியை சாப்பிட அழைத்து வர அக்கா மாடிக்கு சென்ற போது,10 நிமிடம் கழித்து வருவதாக கூறியுள்ளார். 

பின்னர் தாய் மேலே சென்று பார்த்தபோது, அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த தாய், குடும்பத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்தபோது, ஆதவ் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள்,
ஆதவ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சக மாணவர்கள் முன்பு ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்து மாணவன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

நங்கநல்லூரில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement