மரியவில்சன் இங்கிலாந்தின் அரசரா..? - உயர்நீதிமன்றம் கேள்வி

சகோதரரை தாக்கிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டேன் என கூற நிதி அமைச்சர் மரியவில்சன் என்ன இங்கிலாந்தின் அரசரா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி விடுத்தது
பிரதமராக இருந்தபோது நரசிம்மராவ் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார் -
நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரும் மனுதாரர் மரியவில்சன் மாநிலத்தின் நிதி அமைச்சர்தான் - அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவிக்கு வந்தபிறகு ஆஜராக மாட்டாரா? - எந்த தேதியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என பிற்பகல் தெரிவிக்க மரியவில்சன் தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்தது
புதுச்சேரி போலீஸார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது



