முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › குரோம்பேட்டையில் நடைமேடையை சுரங்கப்பாதையுடன் இணைக்
உள்ளூர் செய்திகள் குரோம்பேட்டையில் நடைமேடையை சுரங்கப்பாதையுடன் இணைக்க கோரிக்கை
*குரோம்பேட்டை ரெயில் நிலைய நடமேடையை ராதாநகர் சுரங்கப்பதையுடன் இணைக்க வேண்டி நலச்சங்கத்தினர்திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது
குரோம்பேட்டை ராதா நகர் சுரங்கப்பாதையுடன் நடைமேடை இனைக்கும் படிக்கட்டுகளை ரெயில்வே நிர்வாகம் அமைக்க கோரி தாம்பரம் மாநகராட்சி 2-3 மண்டல் குடியிருப்போர் நலச்சங்க இணைப்பு மைய்ய நிர்வாகிகள் ரெயில்வே நிர்வாகம் உண்மையை மறைப்பதாக தெரிவித்து அவசர செய்தியாளர் சந்திப்புக்கு குரோம்பேட்டை ரெயில் நிலைய நடைமேடையில் திரண்டனர்,
இணைப்பு மைய்ய செயலாளர் முருகையன், தலைவர் ஸ்ரீதர், பொருளாளர் அரசி, சிட்லபாக்கம் குடியிருப்போர் இணைப்பு மையத்தின் தலைவர் விஸ்வநாதன்,சாந்தி நகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர்
குரோம்பேட்டை நாசர், போலீஸ் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு குடியிப்போர் நலச்சங்க முக்கிய நிர்வாகிகள் திரண்டனர்,
அப்போது மத்திய ரெயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சரவணம் நடைமேடையில் பேட்டி கொடுக்க தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது,
அதனையடுத்து ரெயில் நிலைய நடைமேடை முகப்பில் செய்தியாளர்களிடம் இணைப்பு மைய்ய செயலாளர் முருகையன் கூறியதாவது:-
ஏற்கனவே பல்வேறு வித கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியும் ரெயில்வே நிர்வாகம் அலட்சியம் காட்டுவதால் ஆண்டுக்கு 30 பேர் இப்பகுதியில் தண்டவாளத்தை கடக்கும் போது விபத்தில் சிக்குவது தொடர்கிறது
மீனம்பாக்கம், பரங்கிமலை போன்று குரோம்பேட்டையிலும் நடைமேடைகளை சுரங்கப்பாதையுடன் இணைக்க நிதிமன்ற உத்திரவு இருந்தும் ரெயில்வே நிர்வாகம் செயல்படுத்த முன்வரவில்லை இதனால் அருகில் உள்ள மகளிர் கல்லூரி மாணவிகள், குரோம்பேட்டை சுற்றியுள்ள 3 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்
அதனை தொடர்ந்து நடைமேடை ராதாநகர் சுரங்கப்பாதை திட்டம் செயல்படுத்தும் இடத்தை நேரில் முருகையன் விளக்கினார், இதனை ரெயில்வே நிர்வாக தட்டிகழிக்க நினைத்தால் நிதி மன்றத்தை நாடி உத்திரவு பெற்றது போல் நிதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் ஆவன செய்யப்படும் என கூறினார்.



