முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › கல்லூரி பேராசிரியையை தாக்கி நகை கொள்ளை
உள்ளூர் செய்திகள் கல்லூரி பேராசிரியையை தாக்கி நகை கொள்ளை
தாம்பரம் அருகே கல்லூரி பேராசிரியை வழிமறித்து தாக்கி 7 சவரன் செயின்பறிக்கப்பட்டது இதில் படுகாயம் அடைந்த பேராசிரியை உயிர் ஊசலாடுகிறது
தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த சோனா(37), பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசியராக பணிசெய்கிறார்,
நேற்று மாலை பணி முடித்து இருசக்கர வாகனத்தில் விடு திரும்பும்போது நடுவீரப்பட்டு பிருந்தாவன் நகர் பகுதியில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை மறித்து முக்கில் குத்தி செயின் பறிக்க முயன்றார்,
செயினை விடாமல் பிடித்த சோனா இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் மேலும் இடது கண்ணத்தில் பலமாக தாக்கி 7 சவரன் செயினுடன் தப்பி சென்றார்,
இந்த நிலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் பெருங்களத்தூரில் தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐ.சி.யு வில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்,
இது குறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்,
ஏற்கனவே பெருங்களத்தூர் அருகே வீட்டில் உறங்கிய தம்பதியை தாக்கி பெண்ணிடம் 7 சவரன் பறித்த அடுத்த நாளே மற்றொரு செயின் பறிப்பு சம்பவம் நடத்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.



