GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › உள்ளூர் செய்திகள் › தாம்பரம் அருகே மழை நீர் கால்வாயில் கிடந்த பிணம்
உள்ளூர் செய்திகள்

தாம்பரம் அருகே மழை நீர் கால்வாயில் கிடந்த பிணம்

👤 Author 🕐 16 Oct 2026, 09:35 👁️ 11 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
தாம்பரம் அருகே மழை நீர் கால்வாயில் கிடந்த பிணம்
விளம்பரம்Advertisement
தாம்பரம் அருகே முடிச்சூரில் மழைநீர் கால்வாயில் ஆண் பிணம் மீட்கப்பட்டது 

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் பராமரிப்பின்றி இருந்த மழைநீர் வடிகால்வாயில் சாக்கடையுடன் மழைநீர் ஓடிக் கொண்டு இருந்தது,

இந்த நிலையில் அந்த வடிகால்வாயில் ஆண் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்ட அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் தலைமை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர் முடிச்சூர் கொம்மியம்மன் நகரைச் சேர்ந்த  சேட்டு (வயது-54) என்பதும் தெரியவந்தது.

இவரது மனைவி நாகலட்சுமி என்பவர் 10 வருடங்களுக்கு முன்பு வேறு ஆண் நபருடன் சென்று விட்ட நிலையில், தனது மகன்களான சந்துரு,சஞ்சய் ஆகியோருடன் முடிச்சூரில் வசித்து வந்துள்ளார்.

இரண்டு மகன்களுக்கும் தாயும் தந்தையுமாக இருந்து வந்த நிலையில், தற்போது தந்தை உயிரிழந்த சம்பவம் மகன்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நடந்து வரும்போது கால் தவறி மழைநீர் வடிகால்வாயில் விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வேறு யாராவது தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement