1 லட்சம் கோடி தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்றதா?

அந்நியச் செலாவணியை பாதுகாக்க ரூ.1.15 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்பனை செய்திருக்கலாம் என வெளியான செய்தியை அது திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கையிருப்பு தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்றதாக சில பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என்பதை ரிசர்வ் வங்கி வலியுறுத்திக் கூறுகிறது. தங்கத்தின் இருப்பு குறித்த விவரங்கள் ரிசர்வ் வங்கியின் மாதாந்திர செய்தி அறிக்கையில் வெளியிடப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது



