ரீல்ஸ் போட கிளம்பிய அமைச்சர்கள் பாஜக கண்டனம்

பாஜகவின் சார்பில் சீனிவாசன் வெளியீட்டு விழா அறிக்கையின் கூறியிருப்பதாவதுமதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் ஒருவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், தற்போதைய தவெக அரசின் நிர்வாகத் தோல்விக்கான மற்றுமொரு சான்று.
புதிதாக ஆட்சி அமைக்கும் கட்சிகள் எல்லாம் முதல் 6 மாதங்களில் தப்பித்தவறிக் கூட தங்கள் மீது எவ்வித களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமுடன் செயல்படுவார்கள். ஆனால், திரு. ஜோசப் விஜய் அவர்களும் அவரது அமைச்சர்களும் பதவியேற்றவுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என மீண்டும் ரீல்ஸ் போடக் கிளம்பிவிட்டார்கள் போல. அதனால் தான் திமுக ஆட்சிக்கு நிகராக தவெக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
இனியாவது முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் சுதாரித்துக் கொண்டு சீரழிந்த சட்டம் ஒழுங்கை சமன் செய்ய வேண்டும்! சிறுவனின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனைகள் பெற்றுத் தர வேண்டும்! என்று கூறி இருக்கிறார்



