முகப்பு ›
உலக செய்திகள் › விரைவில் முடிவுக்கு வரும் போர்.
உலக செய்திகள் விரைவில் முடிவுக்கு வரும் போர்.

ஈரானுடனான போர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு.
ஈரானின் அணுசக்தித் திறனை முடக்குவதே தங்களது முதன்மை இலக்கு என்றும், அந்த இலக்கு எட்டப்பட்டவுடன் எவ்வித ஒப்பந்தமும் இன்றி அமெரிக்கப் படைகள் அங்கிருந்து வெளியேறும் என்றும் அவர் கூறினார்.
ஈரானில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், புதிய தலைமை மிகவும் நிதானமாகச் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறையும் என்றும் டிரம்ப் உறுதி.



