71% தற்கொலைகளுக்கு போதை பழக்கம் காரணம்: திமுக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டில் 19,965 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அவற்றில் 71% தற்கொலைகளுக்கு கட்டுப்படுத்தப்படாத மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கம் காரணம் என்று திமுக அரசு வெளியிட்ட கொள்கை ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி 2024ஆம் ஆண்டில் மொத்தம் 19,965 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. தற்கொலை செய்தவர்களில் 76% (14,770) ஆண்கள், 26% (5,171) பெண்கள், 24 பேர் திருநங்கையர் ஆவர்.
மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையானது 12% (2,396 பேர்) தற்கொலைகளுக்கு காரணம் என்றும், குடும்பப் பிரச்சினைகள் (39%), உடல்நல மற்றும் மனநோய் உள்ளிட்ட காரணங்களும் அதனுடன் தொடர்புடைய பக்கவிளைவுகள் என்றும் கூறப்பட்டுள்ளது; மொத்தத்தில் 71% சம்பவங்களுக்கு போதைப் பழக்கம் காரணம் என அன்புமணி குற்றம்சாட்டினார்.



