தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 43-வது வார்டு சிட்லபாக்கத்தில்மெட்ரோ குடிநீர் இணைப்பை பெறுவதற்கு சிட்லபாக்கம் பகுதி வாழ் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை .

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 43-வது வார்டு சிட்லபாக்கத்தில்மெட்ரோ குடிநீர் இணைப்பை பெறுவதற்கு சிட்லபாக்கம் பகுதி வாழ் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர் கோரிக்கை விடுத்தும் மாமன்ற கூட்டத்தில் இது குறித்து விவாதித்த மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் முயற்சியில் மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோரின் ஒப்புதலோடு விரைந்து நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தற்போது குரோம்பேட்டைநேரு நகர் அய்யாசாமி பள்ளிக்கு அருகாமையில் வரை சென்றடைந்துள்ளது. இந்த பகுதியில் செம்பரம்பாக்கத்தில் இருந்து வரக்கூடிய மெட்ரோ இணைப்பு மற்றும் நெமிலி கடல் நீரை குடிநீராக சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் இரண்டு வெவ்வேறு குழாய் பாதையில் 2 வால்வுகள் அமைத்து இணைக்கும் பணியினையும். சர்வ மங்களா நகர் 1வது லேண்ட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் நேரில் பார்வையிட்ட போது எடுத்த படம் மேலும் மாமன்ற உறுப்பினர் தினமும் இப்பணியை பார்வையிட்டு வரும் நிலையில் தற்போது முடிவடைய உள்ள இந்த பணி 2 நாட்களுக்குள் நிறைவடைய உள்ளது.



