மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!

திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர்.
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்ட நிலையில் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிடுகின்றனர். இவர்களும் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்



