அமெரிக்கா ஈரான் 2 வாரம் போர் நிறுத்தம்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காத ஈரான் மீது கடும் கோபத்துடன் பதிவிட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரு நாகரிகமே அழியப்போகிறது என்றும் மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் ஆகியோருடனான பேச்சு அடிப்படையில், ஈரான் மீதான தாக்குதலுக்கு அனுப்பப்படவிருந்த படைகளை நிறுத்த வேண்டும் என்றும், இஸ்லாமிய குடியரசான ஈரான், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஒப்புக்கொண்டதால், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைக்க நான் ஒப்புக்கொள்கிறேன்.
இது இரு தரப்பிலுமான போர் நிறுத்தமாக இருக்கும். இதனைச் செய்வதற்கான காரணம் என்னவென்றால், நாங்கள் ஏற்கெனவே ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஓர் உறுதியான ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் கிட்டத்தட்ட முன்னேறிவிட்டோம். மேலும், ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றுள்ளோம்” எனத் தெரிவித்து போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் டிரம்ப்.



