சிக்னல் கோளாறு: சென்னை கடற்கரை டூ தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சென்னையில் பொதுமக்களின் அன்றாடப் போக்குவரத்தில் மிகவும் அத்தியாவசிய சேவையை புறநகர் ரயில்கள் வழங்கி வருகின்றன. நாள்தோறும் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகள் செல்வோருக்கு புறநகர் ரயில்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றன. குறைந்த கட்டணத்தில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளுக்கு பயணிக்கலாம். இந்நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக இந்த தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து ரயில்களை இயக்கினால் விபத்துகள் ஏற்படும் என்பதால் புறநகர் ரயில் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளன.



