ஏ.ஐ. வேலை வாய்ப்புகளை பறிக்குமா? இளைஞர்களின் அச்சத்திற்கு பதில் அளித்த பிரதமர் மோடி

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் வேலை வாய்ப்பு பறிபோகும் என அஞ்சப்படுகிறது. குறிப்பாக தொழில்நுட்ப துறையில் வேலையிழப்பு குறித்து அதிக அச்சம் நிலவி வருகிறது. டெல்லியில் ஏஐ மாநாட்டினை தொடக்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
"தயாராக இருப்பதுதான் பயத்திற்கு மாற்றுவழி. தொழில்நுட்பம் வேலை வாய்ப்புகளைத் தான் உருவாக்கும். அது வேலைகளை அழிக்காது. அதைத்தான் வரலாறும் கூறுகிறது.
புதுமை நிகழும் போது புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகிக் கொண்டுதான் இருக்கும். ஏஐ யுகத்திலும் இது உண்மையாக இருக்கும்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.



