திமுக கூட்டணியில் 20 தொகுதிகள் கேட்கும் கம்யூனிஸ்ட் கட்சி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 20 தொகுதிகளை கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பெரம்பூர், மதுரவாயல், திருப்போரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் சிபிஎம் கோரிக்கை வைத்துள்ளதாம். ஏற்கனவே காங்கிரஸ் உள்ளிட்ட இதர கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களை கேட்டு வரும் நிலையில், சிபிஎம் கட்சியின் இந்த திடீர் கோரிக்கை திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.



