இந்தியாவை யாராலும் வாங்க முடியாது – ராகுலுக்கு அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில்

புதுடெல்லி: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு பொய்களால் நிறைந்தது. பிரதமர் இந்தியாவை விற்றுவிட்டதாக கூறியுள்ளார்.
தவறான அறிக்கைகள், தவறான கூற்றுக்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தைகள் பயன்படுத்தியுள்ளார். நாட்டை யாராலும் விற்க முடியாது, யாராலும் வாங்க முடியாது; இந்தியாவை வாங்குவதையோ விற்பதையோ யாராலும் கற்பனை கூட செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.



