GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › தமிழகம் › வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப
தமிழகம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? எப்படி கண்டறிவது?

👤 Admin 🕐 20 Dec 2025, 10:17 👁️ 13 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. இதில் உங்களது பெயர் இடம்பெறுமா என்பதை முன்கூட்டியே அதாவது இன்றே அறிந்து கொள்ளலாம்.

தேர்தல் ஆணையத்தின் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களுடைய வாக்காளர் அடையாள எண் அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அளித்தால் விவரங்கள் திரையில் தோன்றும்.

அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

மேலும் விவரங்களுக்கு (view details) என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய விவரங்கள் அனைத்தும் ஒரு தனி திரையில் திறக்கும்.

அதில் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களுடன் வாக்குச்சாவடி அதிகாரி, வாக்குச்சாவடி அலுவலர் ஆகியோரின் பெயர் மற்றும் தொடர்பு எண்களும் இருக்கும். இந்த பக்கத்தை நீங்கள் பிடிஎப் வடிவில் எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

விளம்பரம்Advertisement

வாக்குச்சாவடி அலுவலரிடம் நீங்கள் எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பிக் கொடுத்திருந்தால் உங்களுடைய பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும். நீங்கள் படிவம் நிரப்பிக் கொடுத்தும் பட்டியலில் பெயர் இல்லை என்றால் இந்த ஆவணத்தைக் கொண்டு வாக்குச்சாவடி அலுவலரை அணுகலாம்.

ஒருவேளை படிவம் நிரப்பிக் கொடுக்கவில்லை என்றால் புதிய வாக்காளராக சேர்வதற்கு வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 6 -யைப் பெற்று உரிய ஆவணங்களுடன் அதனை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது ஏதேனும் மாற்றம் இருந்தாலோ டிசம்பர் 19 முதல் 2026 ஜனவரி 18 ஆம் தேதி வரை வாக்குச்சாவடி அலுவலரைத் தொடர்பு கொண்டு மாற்றங்களை மேற்கொள்ளலாம். அதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும்.

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement