முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › பம்மல் பகுதியில் ஒரே இரவில் 10 கொள்ளைகள்
உள்ளூர் செய்திகள் பம்மல் பகுதியில் ஒரே இரவில் 10 கொள்ளைகள்
பல்லாவரம் அருகே பம்மலில் ஒரே இரவில் 10 இடங்களில் கொள்ளையடித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலை சேர்ந்த ஹேமாவதி (30) என்பவர் வீட்டில் கடந்த 16-ம் தேதி பூட்டை உடைத்து 3½ சவரன் நகை, 70 கிராம் வெள்ளி திருடப்பட்டது.அதே இரவில் விநாயகர் கோவில், பால் கடை, கேக் கடை, முப்பாளத்தம்மன் கோவில் உண்டியல் என 10 இடங்களில் தொடர் திருட்டு நடந்தது.
இதுகுறித்து சங்கம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி மற்றும் கைரேகை மூலம் குன்றத்தூரை சேர்ந்த பழைய குற்றவாளி லட்சுமணன் (23) என தெரியவந்தது.இவர் குண்டர் சட்டத்தில் இருந்து ஜாமினில் வந்து 10,நாட்களே ஆனவர்.
தலைமறைவாக இருந்த குற்றவாளி உறவினருக்கு போன் செய்தபோது டவர் லொகேஷனை வைத்து திண்டிவனத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான தனிப்படை போலீசார் லட்சுமணனையும், அவரது கூட்டாளி சஞ்சய் (20) என்பவரையும் மடக்கி பிடித்தது. மற்றொரு கூட்டாளி சக்திவேல் (23) பாண்டிச்சேரியில் காதலியுடன் இருந்தபோது கைது செய்யப்பட்டார்.
நகையை கோயம்பேட்டில் ரூ.1 லட்சத்திற்கு அடமானம் வைத்து பாண்டிச்சேரியில் உல்லாசமாக இருந்ததாகவும், கொள்ளையடித்து ரீல்ஸ் போட்டு சொகுசு வாழ்க்கை வாழ்வதே நோக்கம் எனவும் வாக்குமூலம் அளித்தனர்.அதன் பின்னர் திருடப்பட்ட நகை ஒரு சக்கர வாகனம்,கத்தி ஆகியவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.



