முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › 23 ஆயிரம் விநாயகர் கண்காட்சி எஸ்.சி.எஸ் பள்ளி மாணவ
உள்ளூர் செய்திகள் 23 ஆயிரம் விநாயகர் கண்காட்சி எஸ்.சி.எஸ் பள்ளி மாணவ மாணவிகள் கண்டு களிப்பு.
சிட்லபாக்கம் காந்தி தெருவில் உள்ள ஸ்ரீ லட்சுமி ராம் கணேஷ் மஹாலில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கண்காட்சி நடந்தது. இந்நிகழ்வில் குரோம்பேட்டை நேரு நகர் எஸ். சி.எஸ்.கிண்டர் கார்டன் மழலையர் பள்ளி மாணவ மாணவிகள் கண்டு களித்தனர் அப்பொழுது விநாயகர் பாடல்களை மனம் உருக பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் விநாயகா குழும தலைவர் சீனிவாசன் எஸ்.சி.எஸ். பள்ளி தாளாளர் கிரிஷ் சந்தானத்திற்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விநாயகர் கண்காட்சி கண்டு ரசித்தனர்.



