ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: இந்திய மகளிர் 4x400மீ தொடர் ஓட்டத்தில் தங்கம்; குல்வீர் சிங்குக்கு ஹாட்ரிக் பதக்கங்கள்
ஆய்ச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி 2026 தடகளத்தின் இறுதி நாளில், இந்தியா மகளிர் 4x400மீ தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றது. கிரண் பஹால், பூவம்மா மச்செட்டிரா, பிராசி சௌதரி மற்றும் வித்யா ராம்ராஜ் அணியினர் 3:29.69 நேரத்தில் வெற்றியைப் பதிவு செய்தனர். 2018 ஜகார்த்தாவுக்கு பிறகு, இந்திய மகளிர் அணி 4x400மீ தொடர் ஓட்டத்தில் தங்கத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
5,000மீ ஓட்டத்தில் வெண்கலம் வென்ற குல்வீர் சிங், 10,000மீ மற்றும் 1,500மீ வெள்ளிகளுடன் மூன்று பதக்கங்களை நிறைவு செய்தார்.
ஹை ஜம்ப் (High Jump) போட்டியில் பூஜா சிங் வெண்கலம் வென்றார்; கலப்பு 4x100மீ தொடர் ஓட்டத்தில் இந்தியா புதிய தேசிய சாதனையுடன் வெண்கலம் பெற்றது.போல் வால்ட் (Pole Vault) போட்டியில் தேவ் மீனா 5.50மீ தாண்டி தனது தேசிய சாதனையை மேம்படுத்தினார்.
இந்தியா தடகளப் பிரச்சாரத்தை 1 தங்கம், 9 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.



