தாம்பரம் மாடம்பாக்கத்தில் வேலம்மாள் பள்ளியில் ஓவியப் போட்டி

பள்ளிகளுக்கு இடையேயான ஓவியப் போட்டி தாம்பரம் மாடம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தாம்பரம் மாடம்பாக்கத்தில் உள்ளது வேலம்மாள் வித்யாலயா பள்ளி. இப்பள்ளியில், கல்வி மட்டுமல்லாது கலைகளிலும் அனைத்து மாணவ மாணவிகளும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுதோறும் ஓவியப்போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி காலை பள்ளிகளுக்கு இடையேயான ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் சேலையூர், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வந்து ஓவிய போட்டியில் பங்கு பெற செய்தனர். வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் முதல்வர் கார்த்திகா தேவி, Admin ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் ஓவியப்போட்டி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த ஓவியப்போட்டிக்கு ஒத்துழைப்பு வழங்கிய மாணவ மாணவிகள், பெற்றோருக்கு பள்ளி முதல்வர் நன்றி தெரிவித்தார். போட்டி முடிவில் சிறந்த ஓவியங்களை தீட்டிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



