முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › குரோம்பேட்டையில் நேபாளத்தில் மாயமான 49 பேர் குடும்
உள்ளூர் செய்திகள் குரோம்பேட்டையில் நேபாளத்தில் மாயமான 49 பேர் குடும்பத்தினர் குமுறல்
குரோம்பேட்டையில் உள்ள மகாதேவ் கைலாஷ் யாத்திரை நிறுவனத்தின் மூலம் கடந்த மாதம் கைலாஷ் யாத்திரை சென்ற 49 பேர் நேப்பாள் வெள்ளத்தில் சிக்கி மாயமான நிலையில் அவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை என்றும் அரசு மெத்தனமாக இருப்பதாகவும் பாதிக்கபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கபட்டவர்களின் குடும்பத்தார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தபோது, வெளிநாடு தமிழர் நலன் துறை
அமைச்சர் தென்னரசு அல்லது இதற்கான சிறப்பு அதிகாரியோ காணாமல் போனவர்கள் குறித்து சரியான தகவல் குடும்பதினருக்கு எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை என்றும், பல போராட்டங்கள் நடத்தியும் மெத்தனம் காட்டுவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், மாயமான 49 பேரின் குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் பெற்றோர்கள் கணவன் மனைவி ஆகியோர் பெரியளவில் பொருளாதார பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகவும், சில குடும்பத்தினர் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்திருப்பதாகவும் பல மாணவர்கள் கல்வி கட்டனம் கூட செலுத்த முடியாமல் படிப்பை பாதியில் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்த குடும்பத்தார், , மாயமானவர்களின் குடும்ப பெண்கள் சில சமூக பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் மாயமான 49 பேரின் சிம் கார்டுகள் மூலம் பெறபட்ட சமையல் சிலிண்டர், மின்சார கட்டனம், வங்கி பரிவர்த்தனை, உள்ளிட்ட பல சேவைகள் பெற முடியாத நிலை இருப்பதால், அந்த 49 பேரின் சிம்கார்டுகள் காலாவதி ஆவதற்குள் அவற்றின் நகல் சிம்கார்டை தங்களுக்கு உடனே பெற்று தர வேண்டும் என்றும், மாயமானவர்களின் வங்கி கணக்கை கையாள அந்தந்த குடும்பத்தாருக்கு அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என்றும், அதேபோல் இல்லை என்பதையாவது சரியாக கண்டறிந்து உண்மை தகவலை தெரிவிக்க வேண்டும் என்றும்,, நேபாளத்திற்கு நேரில் சென்று விசாரிக்க பாதிக்கபட்டவர்களின் குடும்பத்தாருக்கு உடனே அனுமதி பெற்று தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.



