முகப்பு ›
உள்ளூர் செய்திகள் › குரோம்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி பலியான 4 பேர்
உள்ளூர் செய்திகள் குரோம்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி பலியான 4 பேர்
குரோம்பேட்டை அருகே பெரிய ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பெரிய ஏரியில் சிறுவர்கள் உயிரிழந்து கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த குரோம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
யுவனேஷ் (வயது-10)
பூஜா (வயது-13)
குஷி (வயது-13)
தேவதர்ஷன் (வயது -12) ஆகிய நான்கு பேரின் சடலங்களையும் மீட்ட போலீசார்,பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் உட்பட 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



