குரோம்பேட்டை துர்க்கை அம்மன் கோவில் குடமுழுக்கு விழா


குரோம்பேட்டை லட்சுமி புரத்தில் அருள்மிகு நவசக்தி சுயம்பு துர்கையம்மன் கோவில் உள்ளது இந்த கோயிலின் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
சென்னை குரோம்பேட்டையில் உள்ள அருள்மிகு நவசக்தி சுயம்பு துர்க்கையம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது,
குடம் முழுக்க நிகழ்ச்சிகள் தமிழில் நடைபெற்றன முன்னதாக நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீர் மேளதாளங்கள் முழங்க கொண்டு செல்லப்பட்டு கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது, விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர், டிரோன் மூலம் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது,
இந்த குடமுழுக்கு விழாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார் பாலாஜி மருத்துவ கல்லூரி தாளாளர் இளமாறன் திருமதி ராஜலட்சுமி இளமாறன் முன்னிலை வகித்தனர்
தாம்பரம் துணை மேயர் கோ.காமராஜ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



