ஆன்லைன் மூலம் நீட் தேர்வு!

அடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
இது பற்றி மந்திரி தர்மேந்திர பிரதான் கூறுகையில் முறைகேடுகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். இந்த விவகாரத்தில் மிக ஆழமான விசாரணையை சிபிஐ மேற்கொள்ளும்.
இனி நீட் தேர்வில் முறைகேடு நடைபெறாது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். வினாத்தாள் கசிவுக்கு முடிவுகட்ட அடுத்தாண்டு முதல் பிரத்யேக தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக நீட் நடத்தப்படும்.” எனத் தெரிவித்தார்.



