விமான விபத்து - 29 பேர் பலி.

கிரீமியாவில் ரஷ்யாவின் ராணுவ விமானம் மலையில் விழுந்து நொறுங்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் ஏஎன் 26 ரக ராணுவ விமானம் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விபத்தில் சிக்கியது.
விமான விபத்தில் 23 பயணிகள் உட்பட 29 பேர் உயிரிழந்ததை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிபடுத்தியது; தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மலைப்பாறையில் விமானம் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல்.



