GST Road News | குரோம்பேட், தாம்பரம், பல்லாவரம், சேலையூர் செய்திகள்
விளம்பரம் Advertisement
GST Road News
Chromepet | Tambaram | Pallavaram | Selaiyur
விளம்பரம் Advertisement
Advertisement
Flash Story
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம்
📢 Big Banner Ad
970×250px slot
Upload image in Admin → Ads Manager
முகப்பு › ஆன்மிகம் › பங்குனி மாதத்தின் விசேஷங்களும் சிறப்புகளும்…
ஆன்மிகம்

பங்குனி மாதத்தின் விசேஷங்களும் சிறப்புகளும்…

👤 Admin 🕐 17 Mar 2026, 04:26 👁️ 7 பார்வைகள்
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெருமைஉண்டு. பங்குனி மாதத்தை வசந்தகாலம் என்று அழைப்பர். விசேஷங்கள் நிறைந்த ஆன்மீக மாதமாகும். பங்குனி உத்திரம், ராமநவமி, ஆகியவை முக்கிய விழாக்களாகும். இம்மாதத்தில் தெய்வங்களின் திருமணங்கள் அதிகம் நடைபெறுவதால், இது சுபகாரியங்கள் மற்றும் திருமணத்திற்கான சிறப்பான மாதமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் பங்குனி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன? என்பதைப் பற்றி பார்க்கலாம்.

பங்குனி மாத முக்கிய விசேஷங்கள்:

பங்குனிஏகாதசி: ஏகாதசி பெருமாளுக்குரிய நாள்.பங்குனி மாதத்தில் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். விஜயா ஏகாதசி தினத்தில் ஏழு தானியங்களை ஒன்றன் மேல் மற்றொன்றைப் பரப்பி மகாவிஷ் ணுவை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பங்குனி பிரதோஷம்: சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்தநாள் பிரதோஷ தினமாகும். பிரதோஷ தினத்தில் கோவிலுக்கு சென்று சிவவழிபாடு செய்தால் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. பங்குனி அமாவாசை: இறந்த முன்னோர்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் அமாவாசை. அன்று புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசிகிடைக்கும். பாவங்கள் அனைத்தும் விலகி சகல நன்மைகளும் வந்து சேரும். பங்குனி உகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு): தெலுங்கு பேசும் மக்களின் புத்தாண்டு தினம் யுகாதி பண்டிகை. நான்கு நவராத்திரிகளுள் ஒன்றான வசந்த நவராத்திரியும் யுகாதி அன்று தான் தொடங்குகிறது. இந்த வசந்த நவராத்திரி காலத்தில் அம்மனை வழிபட்டால் அம்மனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். பங்குனி பௌர்ணமி: பௌர்ணமியன்று செய்யப்படும் அம்பிகை வழி பாட்டுக்கு பலன்கள் அதிகம். பௌர்ணமி இரவு நேரத்தில் சிவவழிபாடு செய்த பிறகு கிரிவலம் மேற்கொண்டால் நன்மைகள் உண்டாகும். உடலும், மனமும் ஆரோக்கியமாகும்.
பங்குனி உத்திரம் (மிக முக்கிய விசேஷம்): பங்குனி மாதப் பௌர்ணமி மற்றும் உத்திரம் நட்சத்திரம் இணையும் இந்நாளில், பார்வதி - சிவன், முருகன்- தெய்வானை, மற்றும் ராமன் - சீதை போன்ற தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக நம்பப்படுகிறது. திருமண விரதம்: பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து, முருகன் அல்லது சிவன் கோயில்களில் திருக்கல் யாணத்தை தரிசிப்பது திருமண பாக்கியம் மற்றும் தம்பதியரிடையே ஒற்றுமையை அதிகரிக்கும். முருகன்வழிபாடு: முருகன்- தெய்வானையை மணந்தநாளாகவும், தாரகாசுரனை வதம் செய்த நாளாகவும் கொண்டாடப்படுவதால்,பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனை வழிபடுவர். பங்குனி ஸ்ரீராம நவமி: ராமபிரான் அவதரித்த புண்ணிய தினமே ஸ்ரீ ராமநவமி. பூவுலகில் தீமையை அழிக்கவும், சரணாகதித் தத்துவத்தின் மகிமையை விளக் கவும் மகாவிஷ்ணு மண்ணுலகில் ராமனாக வந்து அவதரித்தார். ராமநவமி அன்று விரதமிருந்து பானகம், நீர்மோர் ஆகியன படைத்து ராமபிரானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். பங்குனி ஆமலகீ ஏகாதசி: ஏகாதசி,பெருமாளை வண ங்குவதற்கு உகந்த நாளாகும். பங்குனி வளர்பிறை ஏகாதசிக்கு ஆமலகீ ஏகாதசி என்று பெயர். இன்றைய தினத்தில் விரதமிருந்து, நெல்லி மரத்தடியில் பரசுராமர் படத்தை வைத்து பூஜை செய்தால் புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். பசு தானம் செய்த புண்ணியமும் கிடைக்கும். இம்மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்களில் கல்யாணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் அதிகமாக நடைபெறும்.

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

பகிரவும் / Share

விளம்பரம்Advertisement

தொடர்புடைய செய்திகள்

விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager

மேலும் செய்திகள்

விளம்பரம்Advertisement
விளம்பரம்
📢 Leaderboard Ad
728×90px slot
Upload image in Admin → Ads Manager
விளம்பரம் · Advertisement
5s
Advertisement