அமித்ஷா பிப். 14-ல் தமிழகம் வருகை! பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் பிப். 14 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலத்தில் பிப். 14 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தரவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிப். 14 ஆம் தேதி மாலையில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் அமித்ஷா பங்கேற்கிறார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் பிப். 14-ஆம் தேதி காரைக்காலுக்கும் செல்லவுள்ளார். அரசு மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.



