சுதந்திரத்துக்குப் பிறகு முதல் ஞாயிற்றுக் கிழமை பட்ஜெட்

2026-27 நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கு முன்பு வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமையில் சில முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஞாயிற்றுக்கிழமையில் நிதிநிலை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.



