முகப்பு ›
மாவட்ட செய்திகள் › ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள ஷூவை ஆட்டைய போட்ட Zepto ஊழ
மாவட்ட செய்திகள் ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள ஷூவை ஆட்டைய போட்ட Zepto ஊழியர்!*
சென்னை அண்ணாநகர் கிழக்கு, ஆர்.வி. நகர் 5-வது குறுக்குத் தெருவில், Zepto செயலி மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்ய வந்த ஊழியர், பொருட்களை வழங்கிவிட்டுத் திரும்பிச் செல்லும்போது வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள Adidas ஷூவைத் திருடிச் சென்றுள்ளார்.
வெறும் காலுடன் வந்து பொருட்களை டெலிவரி செய்துவிட்டுத் திரும்பும்போது, ஷூவைக் கையில் எடுத்துச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100-ஐ தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளைப் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



