குரோம்பேட்டையில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

தாம்பரம்:-குரோம்பேட்டையில் சிறுவர்களை கவரும் விளையாட்டு உபகரணங்களுடன் 46.80 லட்சம் செலவில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை பல்லவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி திறந்துவைத்தார்.
குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலம் கீழ் பகுதியில் சிறுவர்களை கவரும் விதமாக பல்வேறு விளையாட்டு உபகரணங்களுடன் 46.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி திறந்துவைத்தார்,
பல வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் விதமாகவும், தனியார் விடுதி அமைப்பில் இருக்கைகள், சிறுவர் பந்து கூடம், பெயர் தேடும் பலகை, நடைப்பாதை, யோகா திடல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் விதமாக இந்த திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மேயர் க.வசந்தகுமாரி, ஆணையாளர் சீ.பாலச்சந்தர், துணை மேயர் கோ.காமராஜ், மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, கவுன்சிலர் சங்கீதா விஜய், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.



